இதை கண்டிக்காதவர்கள் இந்திய குடிமகனே கிடையாது: எச்.ராஜா

புதன், 26 பிப்ரவரி 2020 (08:46 IST)
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் தலைமை காவலர் ரத்தன்லால் உள்பட 3 காவல்துறை அதிகாரிகள் பலியாகினர். மேலும் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் டெல்லியில் நிலைமையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இராணுவம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் ஒரு சில அரசியல்வாதிகள் பேசி வருவதாகவும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்து அதில் கலவரத்தில் இறந்த ரத்தன்லால் குடும்பத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 
 
முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். pic.twitter.com/7HqcMoc3gI

— H Raja (@HRajaBJP) February 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்