காவிகளே ஒன்று கூடுங்கள் : ஸ்டாலினுக்கு எதிராக கொக்கரிக்கும் ஹெச்.ராஜா
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:53 IST)
திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அந்த விழாவில் பேசிய போது “இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம்” என பதிவிட்டுள்ளார்.