மெல்ல மெல்ல குறையும் தங்கத்தின் விலை!!

புதன், 11 மார்ச் 2020 (16:00 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312க்கு விற்பனை ஆகிறது. 
 
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.33,848க்கு விற்பனை ஆனாது. அதன் பின்னர் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது.  
 
இந்நிலையின் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312க்கு விற்பனை ஆகிறது. அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.4,164க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதேபோல வெள்ளியும் விலை குறைந்து, வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்