செர்லாக் உணவில் பூஞ்சைகள் - நெஸ்லே நிறுவனத்திற்கு நோட்டிஸ்

சனி, 2 ஜூலை 2016 (17:07 IST)
நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவான செரிலாக்கில் பூஞ்சைகள் இருந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
 

 
சென்னையில் பல்வேறு பெரிய கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பூஞ்சை படர்ந்த நிலையில் குழந்தைகளுக்கு தரும் செரிலாக் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
 
இதுதொடர்பாக சென்னை மாவட்ட உணவுத்துறை அதிகாரி ராஜா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இவ்வழக்கில் நெஸ்லேயின் தமிழகப் பிரிவு தலைவர் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மீது இத்தகைய புகார்கள் தொடர்கின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்