இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என்றும், அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் கருணாநிதிக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.