இந்த நிலையில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸை விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சட்டப்பூர்வமாக தான் கையாளப்படுகிறதா? காவல்துறை பணிகளுக்கு பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதி உள்ளதா? தமிழக காவல்துறையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?