இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அவருக்கு இலக்கிய அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இந்திர குமாரி ஊழல் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கும் அவரது கணவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக இலக்கிய அணி தலைவர் இந்திர குமாரி மறைந்த துயரை செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது என்றும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இந்திர குமாரி தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர் என்றும் முதல்வர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.