ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது! – முன்னாள் நீதிபதி!

திங்கள், 18 நவம்பர் 2019 (13:57 IST)
ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது உண்மைதான் என முன்னாள் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து ஸ்டாலின் கைது குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை என பலர் சொல்லிவந்த நிலையில், ஆதாரங்கள் இருப்பதாக முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் எம்.ஜி.ஆர் அரசு வெளியிட்ட அரசாணையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளனர்.

ஆனாலும் நீதிபதி சந்துரு சொல்லும் விஷயங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்