சென்னை அருகே அதிகாலையில் இரண்டு பயங்கர தீ விபத்துக்கள்

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (07:56 IST)
சென்னை அருகே இன்று அதிகாலை இரண்டு பயங்கர தீ விபத்துக்கள் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை அருகே பொன்னேரி என்ற பகுதியில் உள்ள மெதூர் என்ற இடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. கோழித் தீவனங்கள் வைக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியதால் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கோழிகள் எரிந்ததாக தகவல். தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
 
அதேபோல் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் எனத் தகவல் வெளிவந்துள்ளது
 
டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையான இந்த தொழிற்சாலையில்  தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்க  தீயணைப்புத்துறை போராடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்