செய்யாறு அடுத் துள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் கார் ஒன்றை நிறுத்தி விசாரித்த போது அதில் இருந்த நபர் உரிய் ஆவணங்கள் இன்றி கையில் 90,000 ரூபாய் வைத்திருந்தார். விசாரித்தபோது சென்னையில் படிக்கும் மகளின் கல்லூரிக் கட்டணம் கட்ட என சொல்லியுள்ளார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.