அப்போது அவர்கள், தாங்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என்று கூறி அவரிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு துணை ஆய்வாளர், ’யாராக இருந்தாலும் பரவாயில்லை. பொது இடத்தில் ரகளையில் ஈடுபடக்கூடாது’ கூறினார்.
வாக்குவாதத்தில் அந்த கும்பல் காவல்துறை துணை ஆய்வாகர் கொளஞ்சியத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து தேனாம்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த கும்பலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்களில் யாரும் வக்கீல் இல்லை என்பதும், இருவர் கல்லூரி மாணவர்கள், மற்றொருவர் தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.