கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரில் வசித்து வருபவர் சரவணன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.அண்மையில் இவருக்கும், இவரது உறவுக்கார பெண்ணான் ஜான்சிக்கும்(19) பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஜான்சிராணியின் வீட்டிற்குச் சென்று அவருடன் பேசுவதற்காகச் சென்ற சரவணன், அன்று அப்பகுதியில் உள்ள சாலையில் உடலில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது.
அதன் பின்னர் போலீஸார் கூறியதாவது :ஜான்சிராணிக்கும், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த இளைஞர் கொடுத்த யோசனையில்தான் ஜான்சிரானி, சரவணனுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.