கட்சி தாவும் மாஜி அமைச்சர் மணிகண்டன்? சூப்பர் ஆஃபர் கொடுத்த எதிர்க்கட்சி!

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (16:29 IST)
அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக பேச்சுக்கள் வெளியாகி வருகின்றன. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை அதிரடியாக பறித்தார். தற்போது அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கவனித்து வருகிறார். 
 
இதன்பின்னர் மணிகண்டன் துனை முதவர் ஓபிஎஸ்-ஐ சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த இவர்களது சந்திப்பில் மணிகண்டன் சொல்லிய புகார்களை கேட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவாக எந்த பதிலையும் கூறாமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 
இந்நிலையில், மணிகண்டன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கும் முடிவிலும் உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை இந்த மன்னிப்பை ஈபிஎஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டால் மணிகண்டன் கட்சி தாவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
 
எனவே, ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் சுப.தங்கவேலன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவிர பெரிதாக யாரும் இல்லை என்ற காரணத்தால் மணிகண்டனுக்கு திமுகவில் சோபிக்க சூப்பர் வாய்ப்பும் உள்ளது. திமுக தரப்பும் இதற்கு ரெடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்