பொறியியல் படிப்புக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த கலந்து ஆய்வில் சுமார் 30000 மாணவர்கள் கலந்துகொண்டனர். விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த காலக்கெடு முடிவடைந்து தற்போது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டை இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்படும் என்றும் அந்த ஆணையை பெற்றுக் கொண்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் சேர்ந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.