பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்..!

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:56 IST)
பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதி குமார் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல் சென்னை தியாகராய நகரில் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கும் சண்முகம் என்பவர் அது வீட்டிலும் சோதனை செய்து வருவதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
தி நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  செய்ய வந்த நிலையில் வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
 
தொழிலதிபர் சண்முகம் அடிக்கடி விஜய் அபார்ட்மெண்டில் 2வது மாடியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்