புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - சுற்றலில் விடும் தேர்தல் ஆணையம்

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (08:39 IST)
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக கடந்த 22 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
இந்நிலையில் நாளை 9 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதனிடையே புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது. 
 
ஆம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக கடந்த மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால் அதில் பட்டியலினத்தவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு சரிவர செய்யப்படவில்லை. 
 
இதனால் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 5 நாள்களில் மறு அட்டவணை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனிடையே புதிய இடஒதுக்கீடு பட்டியலை புதுச்சேரி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 
புதிய தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்