ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் எடப்பாடி பழனிசாமியால் ஜெயிக்க முடியாது - தினகரன்

வெள்ளி, 12 மார்ச் 2021 (22:10 IST)
ரூ.1000 கொடுத்தாலும் எடப்பாடி பழனிசாமியால் வெல்ல முடியாது என தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடன் அரசியல் கட்சிகள் தீவிரவாக அடுத்ததடுத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளில் அமமுக போட்டியிடவுள்ளது. இதனால் தேமுதிகவின் நிலைமை பரிதாபத்தில் உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்ச்சுவார்த்தை நடந்துவருவதாக தினரக் கூறியுள்ளார். ஆனால் மீதி 19 தொகுதிகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் தற்போது தினகரன்  முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளாதாவது : ஓட்டுக்கு அரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் எடப்பாடிப் பழனிசாமியால் வெல்ல முடியாது.

முதியோர் உதவித்தொகை வழங்காத  எடப்பாடி பழனிசாமியால் எப்படி  ரூ.1500  வழங்க முடியும்.கொடுக்க முடியும்? ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்