எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (14:52 IST)
அதிமுகவில் சசிகலாஅணிக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் யார்  தரப்பு ஆட்சி அமைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஆளுநரை சந்தித்தார் அவர். அவருடன் மூத்த அமைச்சர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  ஆகியோர் உடன் சென்றனர்.

 
இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு  கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தாங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயார் என ஆளுநரிடம் கூறியிருந்ததால் 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை  ஹைகோர்ட்டில் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய  பெஞ்ச் முன்னிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணை என்று கூறப்பட்டது.
 
வழக்கறிஞர் ஜோதி என்பவர் ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்