வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘ தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும். இந்தப் பயணம் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்ற விவரத்தைப் பின்னர் அறிவிப்போம்’ எனக் கூறினார்.