இதுவரை கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு நெருக்கமான கனிம வளத்துறை அதிகாரி ஜெயபால் என்பவரது வீட்டில் ரூபாய் 40 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாகவும் அதில் 20 லட்சத்திற்கு நிரந்தர வைப்பு தொகை ரூபாய் 9 லட்சத்திற்கு நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன