சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சம்பளகாடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்த நிலையில், பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடிக்க காசு கேட்டு குமார் அடிக்கடி பழனியம்மாளைஅடித்து துன்புறுத்தியுள்ளார், சம்பவத்தன்று தன்னிடம் காசு இல்லை என பழனியம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த குமார் தனது சொந்த வீட்டையே தீ வைத்துள்ளார். பழனியம்மாளும், குழந்தைகளும் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் முழு வீடும் எரிந்து சாம்பலானது.