சந்தனப்பேழையில் விஜயகாந்த் உடல்.. என்ன வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (17:11 IST)
விஜயகாந்த் உடலை சுமக்க போகும் சந்தன பேழை தயாராகி வந்துள்ள நிலையில் அதில் பொறிக்கப்பட்டுள்ள பெயரை பார்த்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை காலமான நிலையில் இன்று மாலை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
 
இன்றும் மதியம் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பதும் தற்போது விஜயகாந்த் உடலை சுமக்க போகும் சந்தன பெயரை தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அந்த சந்தன சந்தனப்பேழையில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு அவரது பிறந்த தேதி மற்றும் மறைந்த தேதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சந்தன பேழையை தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த சந்தன பேழையில் தான் விஜயகாந்த் ஆழ்ந்த உறக்கம் கொள்ளப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்