திமுக எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள்: செல்லூர் ராஜூ

வியாழன், 23 நவம்பர் 2017 (23:00 IST)
அதிமுக அமைச்சர்களில் அவ்வப்போது காமெடி செய்து வரும் அமைச்சர்களில் ஒருவராக கருதப்படுபவர் செல்லூர் ராஜூ. இவருடைய தெர்மோகோல் திட்டம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பேசப்படும் திட்டம் என சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.





இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் ஒரு காமெடி கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கின்றார்களாம், அதுவும், இந்த ஆட்சியின் நல்லாட்சியை பார்த்து' என்று கூறியுள்ளார்

அவர் கூறியது இதுதான், 'நல்லாட்சி வழங்குவதால், முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏக்கள் சிலரும் கூட ஆதரவாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், திமுக எம்எல்ஏக்கள் சிலரும் முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்' என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் வச்சு செஞ்சு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்