தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாக உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் குறித்து பேசிய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் “தேர்தல் வந்துவிட்டால் ஈனம், மானம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாரையும் பிரித்து பார்க்காமல் எல்லாரிடமும் ஓட்டு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.