குறிப்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தற்போது தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றும் தொகுதி உடன்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து விடுவார் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.