முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு, தமிழகத்தில் பல இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்தும், மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மவுன ஊர்வலம் நடத்தினர்.
இந்நிலையில், அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் கதிரேசன், அங்குள்ள ஒரு தர்காவுக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டார். இதே போல, தாமரைப்பாடியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 25 பேர் மொட்டை போட்டுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.