போட்டோ எடுக்க ரூ.100 வசூல் செய்த ’கேப்டன்’: வைகோ ஃபார்முலாவா?

ஞாயிறு, 8 ஜனவரி 2017 (12:14 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுக்க 100 ரூபாய் வசூல் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், விஜயகாந்த் வந்ததும், கூட்டத்திற்காக வரவில்லை, தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விஜயகாந்த் அருகில் நின்று புகைபடம் எடுத்து கொண்டனர். மேலும் புகைப்படம் எடுக்க நபர் ஒருவருக்கு 100 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது.

முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களிடம் ரூ. 100 கொடுத்து வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்