தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சரியாக எத்தனை பேர் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் தினகரன் புதுச்சேரி சென்று கொண்டிருப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அவர் சில கருத்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தினகரன் அணியை நோக்கி செல்லும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கவலை அடைந்திருப்பதாகவும், ஆட்சியை தக்க வைக்க அவர் தன் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.