இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், நேற்றும், இன்றும் எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் “இந்த தீர்ப்பில் பல குறைகள் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சபாநாயகர் தனபால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் தீர்ப்பளிக்கும் முன் தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.