டிசம்பர் 4 முதல் தொடர் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சனி, 2 டிசம்பர் 2017 (11:16 IST)
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் அரபி கடல் வழியாக லட்சத்தீவு அருகே சென்றுவிட்டது. ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கனமழையுடன், புயல் காற்றும் வீசியது. 
 
இந்நிலையில், இந்திய வானிலை மையம் மழை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும், இன்று அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
லட்சத்தீவு பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும், கேரளா, கர்நாடக கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதனையடுத்து டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்