உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும், அப்போ வெடிக்கும்: சிவி சண்முகம்!

வெள்ளி, 24 ஜூன் 2022 (14:32 IST)
அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம் என சண்முகம் பேட்டி. 

 
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி செய்து கொண்டு வருவதாகவும் ஆனால் அந்த முயற்சியை தடுக்க ஓபிஎஸ் சட்ட நடவடிக்கைகளில் இறங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில் அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் காலாவதி ஆகி விட்டதாகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அவைத் தலைவருக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்றும் செய்தி சண்முகம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனைதொடர்ந்து அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் என தெரிவித்தார். 
 
முன்னதாக நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அங்கு அவர், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும். ஆனால் அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர் என அதிமுக பெயரை குறிப்பிடாமல் சூசகமாகவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்