மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு: ரூ.10 லட்சம் வரை பெற்று கொள்ளலாம்!

புதன், 30 ஜூன் 2021 (21:47 IST)
மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் முறையை மேற்கு வங்க மாநில அரசு அமல்படுத்தியதை அடுத்து அம்மாநில அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டில் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த கடன் மூலம் அவர்கள் தங்களுடைய மேல்படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதி தான் இது என்பதும் தற்போது இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு மேற்கு வங்க மாநில இளைஞர்கள் சுயசார்பு உடையவர்களாக முன்னேற வேண்டும் என்பதே இந்த  திட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்