மதத்தை வளர்ப்பது அரசின் வேலை இல்லை.. முத்தமிழ் முருகன் மாநாடு தவிர்க்கப்பட வேண்டும்! - சிபிஎம் பாலகிருஷ்ணன் கருத்து!

Prasanth Karthick

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (09:40 IST)

பழனியில் தமிழ்நாடு அறநிலையத்துறையின் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கி நடந்து வரும் நிலையில் அதை விமர்சித்து சிபிஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

 

 

தமிழ் கடவுளாக வழிபடப்படும் முருகன் குறித்து பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 

இந்நிலையில் தமிழக அரசு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் “மதத்தில் இருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை. எந்த ஒரு மதத்தையும், பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

 

இந்த சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது. கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே ஆர்எஸ்எஸ் - பாஜக நோக்கம். அதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசு சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்