குற்றால அருவிகளில் சீசன் தொடங்கியது

வெள்ளி, 3 ஜூன் 2016 (15:17 IST)
குற்றாலத்தில் நேற்று முதல் சாரல் துவங்கியது.



 

தமிழகமெங்கும் கடந்த சில தினக்ங்களாக கடும் வெப்பம் வாட்டி வந்தது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவியது. ஜூன் மாதம் தொடங்கியதும் குற்றால சீசன் அறிகுறி தென்படும். ஆனால் கடந்த சில தினங்களாக வெப்பம் மட்டுமே வாட்டியது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைதொடர்ந்து பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக குற்றாலத்தையொட்டி உள்ள தென்காசி,பாவூர்சத்திரம், கடைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியதுடன் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றால அருவி சீசை ஜூன் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்