சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தில் சாய் பல்லவியின் மொபைல் எண் தன்னுடையது என்று கூறிய சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இதன் காரணமாக, தங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்ற காட்சி நீக்கப்பட்டு தணிக்கை குழுவிடம் புதிய சான்று பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதை அடுத்து, இந்த மனுவை நீதிபதி டிசம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.