அதிமுக கொடி மற்றும் சின்னம்: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த தீர்ப்பு.!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:13 IST)
அதிமுக கொடி, சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அதிமுக கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். 
 
மேலும் எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப வைப்பீர்கள் என ஓபிஎஸ் தரப்பிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்  சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  
 
அதிமுக மற்றும் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்