தமிழகத்தில் ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சனி, 13 ஜூன் 2020 (18:20 IST)
இன்று தமிழகத்தில் மேலும் 1989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.
 

இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்