மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா
சனி, 8 ஜனவரி 2022 (21:06 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 9 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் முழு ஊரடங்க்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கொரோனா கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்