ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:07 IST)
ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
 ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என விற்பனையாகி வந்த கொத்தமல்லி ஒரு கட்டு 100 ரூபாய் என விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொத்தமல்லியை பயிரிட்டவர்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதனால் கொத்தமல்லியின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்களிலும் கொத்தமல்லி விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை ஒரு கட்டு கொத்தமல்லி விற்கப்படுவதாகவும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு கொத்தமல்லி கட்டு விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த வாரம் வரை பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி திடீரென 100 ரூபாய்க்கு விற்கப் படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்