இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்,சுப்பிரமணியன் ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது. ஒரு சில நிகழ்வுகளில் 1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். மேலும், பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டு தீர்மானிக்க 8 வாரங்களில் உரிய விதிகள் வகுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.