டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
ஞாயிறு, 29 மே 2022 (14:08 IST)
டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு மேல் சிகிச்சை அளிக்க அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவருடைய மகன் சிம்பு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், டி ராஜேந்தர் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக. ராஜேந்தர் விரைவில் குணமாக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது