சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் நேற்றிரவு , நெல்லை கிழக்கு மாவட்டம் தலைவர் ஜெயக்குமார் ஆதர்வாளர் இருவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ரூபி மனோகரன் தலைமையில் சிலர் கூடியிருந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அங்கு வந்த காங்கிரஸ்தலைவர் கேஎஸ் அழகிரி, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். அதேபோல், ரூபி மனோகரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே உடன்பாடு இல்லாததால் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கேஎஸ் அழகிரியின் காரை மறித்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.