போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்! – கோவையில் பரபரப்பு!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (15:14 IST)
போக்குவரத்து துறையை கண்டித்தும்,பல்வேறு கோரிக்கைகளையும்  வலியுறுத்தியும் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


 
தமிழக அரசு போக்குவரத்து துறை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வாகன சாலை வரி பன்மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம்,  ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதம் ரத்து செய்ய வேண்டும்.
ஆர்.டி.ஓ,காவல் துறை தொழிலாளர்கள் மீது கடுமையான கெடுபிடிகளுக்கு கண்டனம், 2019-ம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், தொழிலாளர் பாதிப்புக்குள்ளான பெட்ரோல்,டீசல்,எரிவாயு மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்விற்கு கண்டனம், டோல்கேட் கட்டணங்களை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்டம் சிஐடியூ சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்