துப்பாக்கிச்சூடில் காயமடைந்த மீனவருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:32 IST)
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ள மீனவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரண  நிதி அறிவித்துள்ளார்.

இதில் படகில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் காயமடைந்தார். அதன் பின்னர்தான் அவர்கள் மீனவர்கள் என்று தெரிய வந்ததை அடுத்து காயமடைந்த மீனவரை இந்திய கடற்படையினர்களே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

சொந்த நாட்டு மீனவர்களையே இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த   நிலையில், இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்குநிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ: தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை: நடுக்கடலில் பதட்டம்!
 
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் திரு. வீரவேல், த/பெ. காசிராஜன் என்பவர், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

காயைமடைந்த சம்பவத்தில் திரு.வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர் திரு.வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்