முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

வியாழன், 13 மே 2021 (17:41 IST)
கொரனோ தடுப்பு குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களை காப்பாற்றுவது எப்படி? ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்வது எப்படி? உள்பட பல்வேறு விஷயங்கள் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இப்படியான நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வர அனுமதி அளித்த நிலையில் இந்த தளர்வுகளை பொது மக்கள் பலர் தவறாக பயன்படுத்தி தேவை இல்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.
 
எனவே இத்தளர்வுகளை  நீட்டிக்கலாமா/ வேண்டாமா என்பதையும்,  மேலும்  நல்ல ஆலோசனைகளை அனைத்து கட்சி  கூட்ட பிரதிநிதிகள் வழங்க தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்