பிரபல நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.7,360 கோடி கொரோனா நிவாரண நிதி

வியாழன், 13 மே 2021 (16:18 IST)
பிரபல நிறுவனம் இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,.360 கோடி வழங்கியுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது, ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், எத்திரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் கொரொனா நிதியாக இந்தியாவுக்கு ரூ.7,360 கோடி மதிப்பிலான இனு கிரிப்டோ கரன்சியை  வழங்கியுள்ளார்.

இந்த கிரிப்டோ கரன்சியை இந்திய ரொக்கமாக மாற்றும்போது இதன் மதிப்புக் குறையும் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஜோஹோ நிறுவனம் சார்பில் கொரொனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இந்நிறுவனத் தலைவர் குமார் வேம்பு  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ. 5 கோடி அளித்தார்.


 

Thanks @VitalikButerin

One thing we have learnt from Ethereum and @VitalikButerin is importance of community

We will not do anything which hurts any community specially the retail community involved with $SHIB

We will act responsibly!

Plz dont worry $SHIB holders. https://t.co/M4GxTR0JAn

— Sandeep - Polygon(prev Matic Network) (@sandeepnailwal) May 12, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்