சென்னை பல்கலை மாணவர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை...

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (19:50 IST)
இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலை மாணவர்களுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி, ஜாமியா பல்கலைக் கழகத்தில் நேற்றைய போராட்டத்தின் போதும், மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தாக்குதல் நடத்தியது நாடு தழுவிய அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில், ’குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு’ எதிராக குரல் கொடுத்து வரும் வேலையில், சென்னையில் உள்ள லயோலா கல்லூரி  மாணவர்களைத் தொடர்ந்து சென்னைப் பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்கலைக் கழகத்திற்கு 16 நாட்கள் விடுமுறை விடுப்பதாக பதிவாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அத்துடன், மாணவர்கள் பல்கலைக் கழக விடுதிகளில் இருந்து உடனடியாக அறைகளைக் காலி செய்ய வேண்டுமென  அறிவிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்