சென்னையில் இருந்து தூத்துகுடி செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு!

வியாழன், 22 டிசம்பர் 2022 (15:52 IST)
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரயில்கள் கூட்டமாக இருப்பதால் விமானத்தில் செல்வதற்கு சிலர் முயற்சி செய்வார்கள். 
 
ஆனால் பண்டிகை நேரத்தில் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு ரூபாய் 14 500 என விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக விமானத்தில் செல்ல 5400 கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை திருச்சி கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமான கட்டணம் உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்