நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை.. சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்..!

Mahendran

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (16:22 IST)
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் நாளை மாற்றம் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் மட்டும் சேவையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அந்த வகையில் நாளை கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை கால அட்டவணை பின்பற்றப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே கீழ்கண்ட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்.
 
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
 
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
 
 பயணிகள் இதனை அறிந்து, தங்களின் பயணத்தை அதற்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்