5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
புதன், 5 ஜூலை 2023 (14:07 IST)
இன்று மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
தேனி திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது